மோட்டார் சைக்கிளில் மது விற்ற ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர்; சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
மோட்டார் சைக்கிளில் மது விற்ற ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் குணசேகரன் (வயது 65). இவர் திருத்தணி பை-பாஸ் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று மிலாது நபியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பதால் நேற்று முன்தினம் இரவு குணசேகரன் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு திருத்தணி பைபாஸ் சாலை, அரக்கோணம் சாலை, சித்தூர் சாலை மற்றும் நகரின் முக்கிய இடங்களில் அதிக விலைக்கு மது விற்றுள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் மது விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ அடிப்படையில் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story