வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:47 PM GMT)

வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி அருகே உள்ள அதிவீரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமர் மகன் அரிபாண்டி (வயது 21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த பிரதீப் குமார், அரிவாளால் அரிபாண்டியை வெட்டி விட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அரிபாண்டி திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அரிபாண்டி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் பிரதீப்குமார் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே சம்பவம் குறித்து பிரதீப்குமார் கொடுத்த புகாரில் அரிபாண்டி, அரவிந்த்குமார், கவுதம், உதிரைபாண்டி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story