மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த பாம்பு


மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த பாம்பு
x
தினத்தந்தி 21 Feb 2023 7:00 PM GMT (Updated: 21 Feb 2023 7:00 PM GMT)

வத்தலக்குண்டு அருகே மோட்டார் சைக்கிளில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அண்ணாநகர் கோட்டை தெருவில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு கீழ் பகுதியில் பாம்பு ஒன்று தலைநீட்டிக் கொண்டு இருந்தது. இதனை அந்த வழியாக சென்ற வத்தலக்குண்டு கூட்டுறவு நகர வங்கி முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களுக்கு 'டிமிக்கி' கொடுத்து விட்டு அந்த பாம்பு வேகமாக தெருவில் ஊர்ந்து சென்றது. அந்த பாம்பை விடாமல் விரட்டி சென்று தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். அது சுமார் 6 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்த பாம்பாகும். பின்னர் அந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வத்தலக்குண்டு அருகே உள்ள சித்தூர் வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.


Related Tags :
Next Story