தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் தேவை கண்டறியும் சிறப்பு முகாம்
தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் தேவை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தியாகதுருகம்,
தியாகதுருகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றவர்களுக்கான தேவைகள் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொளஞ்சிவேலு, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் ஹேமலதா வரவேற்றார். முகாமில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களிடமிருந்து முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 600-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதில் சமூக நல அலுவலர் புஷ்கலா, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அஞ்சலிதேவி, மின்னலொளி, சுமித்ரா, கலையரசி, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.