திருத்தொண்டர் சபை நிறுவனர் ஆய்வு


திருத்தொண்டர் சபை நிறுவனர் ஆய்வு
x

பாதயாத்திரை பக்தர்களுக்கான வசதிகள் குறித்து திருத்தொண்டர் சபை நிறுவனர் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர். இந்தநிலையில் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் நேற்று பழனிக்கு வந்து பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். குறிப்பாக திண்டுக்கல்-பழனி இடையேயான பாதயாத்திரை பாதையை பல்வேறு இடங்களில் பார்வையிட்டார். தொடர்ந்து கோவில், அடிவாரம் பகுதியில் ஆய்வு செய்தார்.

அதையடுத்து கோவில் தண்டபாணி நிலையத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் வருவாய்த்துறை, போலீஸ், நெடுஞ்சாலை, போக்குவரத்து என அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், பாதயாத்திரை பக்தர்கள் பயன்படுத்துகிற பாதை பல்வேறு இடங்களில் சேதம் அடைந்துள்ளது. சில இடங்களில் பாதையே இல்லை. அந்த இடங்களில் மறுசீரமைப்பு மற்றும் தற்காலிக பாதை அமைக்க வேண்டும். வாகனங்கள் வேகமாக வருவதை தடுக்க தணிக்கை செய்ய வேண்டும். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மீண்டும் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படும். அப்போது குறைகள் இருந்தால், கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். பழனி கோவிலை சுற்றியுள்ள அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். அந்த வழக்கை துரிதப்படுத்தி ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story