ராணிப்பேட்டை தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து; ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பு


ராணிப்பேட்டை தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து; ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பு
x

ராணிப்பேட்டை தனியார் வங்கியில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ஜெனரேட்டர் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்ரோடு பகுதியில் தனியார் வங்கி இயங்கி வருகிறது. இன்று காலை வங்கி ஊழியர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். சிறிது நேரத்தில் மின்தடை ஏற்பட்டது.

இதையடுத்து வங்கி ஊழியர் ஒருவர் மாடியில் உள்ள ஜெனரேட்டரை இயக்கினார். சிறிது நேரத்தில் ஜெனரேட்டரில் இருந்து குபுகுபுவென புகை வந்து தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட வங்கி ஊழியர்கள் வங்கியில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறினார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், போலீஸாருக்கும் வங்கி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்சல் சாரதி மற்றும் போலீசார் வந்தனர். அதற்குள் ஜெனரேட்டர் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி ஜெனரேட்டரில் தீப்பிடித்து எரிந்ததால் ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் நற்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story