பாலாற்றை ஸ்கூட்டரில் கடந்தபோது வெள்ளத்தில் சிக்கிய ஆசிரியை


பாலாற்றை ஸ்கூட்டரில் கடந்தபோது வெள்ளத்தில் சிக்கிய ஆசிரியை
x

பாலாற்றை ஸ்கூட்டரில் கடந்தபோது வெள்ளத்தில் சிக்கிய ஆசிரியை, போராடி மீட்கப்பட்டார்.

வேலூர்

ஆம்பூர் தாலுகா கீழ்முருங்கை கிராமத்தை சேர்ந்தவர் மேரி மிர்லன் (வயது 52). பேரணாம்பட்டு தாலுகா அழிஞ்சிகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி முடிந்ததும் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டார்.

அழிஞ்சிக்குப்பம் பாலாற்றை கடந்த போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நிலைதடுமாறி ஆற்றில் தவறி விழுந்தார். ஸ்கூட்டர் மற்றும் அவரது ஹேண்ட் பேக் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. ஆசிரியை மேரிமிர்லன் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தார். இதைபார்த்த அங்கிருந்த இளைஞர்கள் ஆசிரியை மேரி மிர்லனை போராடி காப்பாற்றினர்.

அழிஞ்சிக்குப்பம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுவதால் பேரணாம்பட்டு, குடியாத்தம், மேல் பட்டியிலிருந்து வரும் வாகனங்கள் அழிஞ்சிக்குப்பம் பாலாற்றின் வழியாக செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி இயக்கப்பட்டன. பேரணாம்பட்டு வருவாய்த் துறையினர், மேல்பட்டி போலீசார் இணைந்து அழிஞ்சிக்குப்பம் பாலாற்றில் இரும்பு பேரி கார்டுகளை வைத்துள்ளனர். பாதுகாப்பு பணிகளை பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன் நேரில் சென்று பார்வையிட்டார். கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று தங்குமாறும் அவர் உத்தரவிட்டார்.


Next Story