செல்போனில் பேசியதால் விபரீதம்: மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு


செல்போனில் பேசியதால் விபரீதம்: மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
x

செல்போனில் பேசிய போது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

செல்போனில் பேசிய போது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மாடியில் இருந்து விழுந்தார்

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை அடுத்த குஞ்சன்விளையை சேர்ந்தவர் மகேஷ் (வயது 32), வெல்டிங் தொழிலாளி. நேற்று முன்தினம் வழக்கம் போல் இவர் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவு 9 மணிக்கு வீட்டின் 2-வது மாடிக்கு சென்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் மகேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 2 கால்களும் ஒடிந்த நிலையில் உயிருக்கு போராடினார்.

சாவு

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினரும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மகேஷ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் வழக்குப்பதிவு செய்து மகேஷ் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story