வங்கியில் ரூ.2½ லட்சம் கையாடல்; பெண் மேலாளர் மீது வழக்குப்பதிவு
வங்கியில் ரூ.2½ லட்சம் கையாடல் செய்ததாக பெண் மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி
திருச்சி மேல சிந்தாமணியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றியவர் பிரபா. சம்பவத்தன்று இவர் வங்கியின் கணக்கில் இருந்து ரூ.2½ லட்சத்தை தவறான பரிவர்த்தனை மூலம் கையாடல் செய்ததாக தெரிகிறது. இது வங்கியின் தணிக்கையின் போது, கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வங்கியின் திருச்சி மண்டல மேலாளர் சபீரா பர்வீன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் பிரபா மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story