தீப்பிடித்த டிரான்ஸ்பார்மர்
பழனி அடிவாரத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்தது.
திண்டுக்கல்
பழனி அடிவாரம் பூங்கா ரோடு பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து அருகே உள்ள குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை அந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து திடீரென தீப்பொறி விழுந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அருகே உள்ள மரத்தில் இருந்து கம்பு ஒன்று டிரான்ஸ்பார்மர் மீது விழுந்து தீப்பொறி ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பணியாளர்கள் மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் பழனி அடிவாரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story