இரு தரப்பினர் மோதல்


இரு தரப்பினர் மோதல்
x
தினத்தந்தி 16 Jun 2023 7:30 PM GMT (Updated: 16 Jun 2023 7:30 PM GMT)
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:-

தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 43). கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா கொட்டாவூரை சேர்ந்தவர் மணி (32). லாரி டிரைவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மணி, நாராயணனின் லாரியை ஓட்டி வந்தார். அந்த நேரம் நாராயணன் மணிக்கு ரூ.25 ஆயிரம் சம்பள பாக்கி கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. நாராயணன், பாரூர் அருகே பாப்பாரப்பட்டியில் தனது சகோதரியை பார்ப்பதற்காக வந்தார். அந்த நேரம் மணி, தனது சம்பள பாக்கி தொகையை நாராயணனிடம் கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் நாராயணனை மணி தாக்கினார். இதில் காயமடைந்த நாராயணன் சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் மணியை பாரூர் போலீசா கைது செய்தனர். அதே போல மணி கொடுத்த புகாரில், நாராயணன் தன்னை தாக்கி விட்டதாக கூறியுள்ளார். அந்த புகாரில் நாராயணனை போலீசார் கைது செய்தனர்.


Next Story