படவேடு கோவிலில் கைக்குழந்தையிடம் கொலுசு திருட முயன்ற பெண் சிக்கினார்.
படவேடு கோவிலில் கைக்குழந்தையிடம் கொலுசு திருட முயன்ற பெண் சிக்கினார்.
கண்ணமங்கலம்
படவேடு கோவிலில் கைக்குழந்தையிடம் கொலுசு திருட முயன்ற பெண் சிக்கினார்.
கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று முன்தினம் பல்வேறு ஊர்களிலிருந்து திரளான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமானோர் கோவில் எதிரே கற்பூரம் ஏற்றி வழிபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது கூட்ட நெரிசலில் சேத்துப்பட்டு தாலுகா நம்பேடு கிராமத்தை சேர்ந்த துரைமுருகன் என்பவர் மனைவி குணசுந்தரி தனது கைக்குழந்தை நித்திஷ்குமாருடன் (வயது 3) நின்று கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் நித்திஷ்குமார் காலில் இருந்த கொலுசினை ஒரு பெண் திருட முயன்றார். அந்த பெண்ணை பக்தர்கள் கையும் களவுமாக பிடித்து சந்தவாசல் போலீசில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக சந்தவாசல் போலீசில் நித்திஷ்குமார் சித்தப்பா விமல்ராஜ் (24) புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் நாராயணன் அத்திப்பட்டு அம்சவேணி மீது, போளூர் ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.