கழிவறையில் மயங்கி கிடந்த இளம்பெண் சாவு


கழிவறையில் மயங்கி கிடந்த இளம்பெண் சாவு
x

கழிவறையில் மயங்கி கிடந்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் கல்யாண் நகர், கீத்துக்கடை பகுதியை சேர்ந்தவர் சர்வானந்தம். இவரது மகள் கிரிஜா (வயது 27). இவர் பி.எஸ்.சி. பி.எட். முடித்து விட்டு தனது தாய் ஆனந்தி, அண்ணன் ஸ்ரீராம்குமாருடன் வசித்து வந்தார். கிரிஜாவுக்கு உடலில் அடிக்கடி கட்டிகள் வருவதும், மறைவதுமாகவும் இருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான கிரிஜா கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமலும், சரியாக சாப்பிடாமலும் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற கிரிஜா வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கழிவறையின் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது கிரிஜா மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கிரிஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரிஜா எப்படி இறந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story