ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம்


ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம்
x

மேல்விஷாரத்தில் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நேஷனல் வெல்பேர் சங்கம் சார்பில் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை சங்கத் தலைவர் முகமத் அயூப் தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் முகமது பஷீம், நிஷாத் அஹமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் பொதுமக்களுக்கு புதியதாக ஆதார் எண் இணைத்தல், பெயர் திருத்தம், செல்போன் எண் மாற்றம், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம், சிறுவர்களுக்கு புதிய ஆதார் புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகள் இலவசமாக செய்யப்பட்டது.


Next Story