மிக்சர் கம்பெனிக்கு சென்ற சிறுமி கடத்தல்


மிக்சர் கம்பெனிக்கு சென்ற சிறுமி கடத்தல்
x

மிக்சர் கம்பெனிக்கு சென்ற சிறுமி கடத்தப்பட்டாா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள பொன்னங்குப்பத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி பிளஸ்-2 வரை படித்து முடித்துவிட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள ஒரு மிக்சர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில் தங்கள் மகளை அதே பகுதியை சேர்ந்த பார்த்தா என்கிற பிரசாந்த் என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றிருக்கலாம் என கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியையும், அவரை கடத்திச்சென்ற பிரசாந்தையும் தேடி வருகின்றனர்.


Next Story