கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை


கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை
x

அரக்கோணத்தில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு பணி நடந்தது.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் பொதுமக்கள் மறியல் காரணமாக கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு பணி நடந்தது.

கால்வாய் ஆக்கிரமிப்பு

அரக்கோணம் - திருத்தணி பிரதான சாலையில் மங்கம்மா பேட்டை மேம்பாலம் அருகே செந்தில் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளால் கால்வாய் இருந்த இடம் தெரியாத அளவுக்கு உள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீர் வெளியேறாமல் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கடந்த 13-ந் தேதி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் சண்முகசுந்தரம் பேச்சு வார்த்தை நடத்தியதியதை அடுத்து மறியலை கைவிட்டனர்.

அளவீடு

இதனை தொடர்ந்து அப்பகுதி பொது மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் மனு மீதான நடவடிக்கையாக அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

அப்போது தலைமை நில அளவலர் ரவி, கைனூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, பாரஞ்சி வருவாய் ஆய்வாளர் குழந்தை தெரேசா, கைனூர் கிராம நிர்வாக அலுவலர் சேகர், உள்வட்ட அளவர் ராஜு மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.


Next Story