5 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை


5 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை
x

வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு கால்நடை தீவன பயிர்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு கால்நடை தீவன பயிர்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

5 ஆயிரம் ஏக்கர்

வேலூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மாடுகள் விவசாயிகளால் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மாடுகளுக்கு போதிய அளவில் தீவனம் அளிக்க முடியாமல் சிலர் தெருக்களில் அவிழ்த்து விடுகின்றனர். இதனால் மாடுகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

தீவன பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் கால்நடைத்துறையில் தீவன மேய்ச்சலுக்கு என சுமார் 5 ஆயிரம் ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளது. இதில் சுமார் 25 சதவீத நிலங்கள் கட்டிடங்களாலும், 75 சதவீத நிலங்கள் பயிர் சாகுபடி செய்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் அந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.

தீவன பயிர்கள்

இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் கால்நடைத்துறையின் கீழ் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதில் மாடுகளுக்காக தீவன பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த நிலங்களில் சுபாபுல், அகத்தி, முள்ளுமுருங்கை வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்படும். மேலும் வேலிமசால், முயல் மசால், கொளுக்கட்டை புல் போன்ற புல் வகை செடிகளும் வளர்க்கப்பட உள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்ட பணியாளர்களை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. அங்கு தீவன பயிர்கள் வளர்க்கப்படும். கால்நடை வளர்ப்போர் அங்கு தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடலாம். இதன்மூலம் தீவன பற்றாக்குறை தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story