நிக்கல்சன் கால்வாய் கழிவுநீரை மறுசுழற்சி செய்ய நடவடிக்கை


நிக்கல்சன் கால்வாய் கழிவுநீரை மறுசுழற்சி செய்ய நடவடிக்கை
x

வேலூர் நிக்கல்சன் கால்வாய் கழிவுநீரை மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

வேலூர்

வேலூர் நிக்கல்சன் கால்வாய் கழிவுநீரை மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

நிக்கல்சன் கால்வாய்

வேலூர் மாநகராட்சியில் முக்கிய கழிவுநீர் கால்வாயாக நிக்கல்சன்கால்வாய் கருதப்படுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளின் வழியாக சென்று இறுதியில் பாலாற்றில் கலக்கிறது. தினமும் ஏராளமான லிட்டர் தண்ணீர் வீணாக செல்கிறது.

இந்த நிலையில் இந்த நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்து மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று மாங்காய் மண்டி அருகே கமிஷனர் அசோக்குமார் தலைமையில் கழிவுநீரை பயோ ஆர்கானிசம் என்ற தொழில்நுட்பத்தில் மீண்டும் பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்யப்பட்டது. அதில் இந்த தொழில் நுட்பம் நம்பக தன்மையை ஏற்படுத்தி உள்ளது. எனவே கால்வாய் நீரை மீண்டும் நன்னீராக மாற்றி பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில் நுட்பத்தில் வெற்றி

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

நிக்கல்சன் கால்வாயில் ஏராளமான கழிவுநீர் வீணாக செல்கிறது. இதை தடுக்கும் வகையில் மீண்டும் இந்த நீரை சுத்திகரித்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் தேவையை தவிர்த்து இந்த நீரை விவசாயத்துக்கும், தாவரத்துக்கும், தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை டெல்லி போன்ற நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முயற்சியை தற்போது வேலூர் மாநகராட்சி கையில் எடுத்துள்ளது.

வீடுகளில் இருந்து வெளியேறும் சமையல்அறை, குளியலறை கழிவுநீரில் சில குறிப்பிட்ட வகையான பாக்டீரியா, கிருமிகள் மட்டுமே காணப்படும். எனவே இதனை மறுசுழற்சி செய்வதற்கான சாத்தியகூறுகள் உள்ளது. அதன்அடிப்படையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளோம். இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கோடை மற்றும் மழைக்காலங்களில் இந்த கழிவுநீர் கால்வாயில் எத்தனை லிட்டர் கழிவுநீர் வெளியேறும் என்பது குறித்து ஆய்வு செய்து நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறும். இறுதியில் தொழிற்சாலைகளுக்கு இந்த நீரை விற்பனையும் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story