ஆதித்தனார் கல்லூரியில்இணையதள உள்ளடக்க பயிற்சி பட்டறை


ஆதித்தனார் கல்லூரியில்இணையதள உள்ளடக்க பயிற்சி பட்டறை
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:45 PM GMT)

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இணையதள உள்ளடக்க பயிற்சி பட்டறை நடைபெற்றது.9

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை ஆங்கிலத்துறை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், இணையதள உள்ளடக்க பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சேவியர் பெஸ்கி வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி ஆங்கிலத்துறை முன்னாள் தலைவர் மணிவண்ணன், டிஜிட்டல் கட்டமைப்பாளர் டார்வின் அபிஷேக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இணையதள உள்ளடக்க பயிற்சி அளித்தனர். இதில் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி ஆங்கில துறைத்தலைவர் ஜெயலட்சுமி, பேராசிரியர் சியாமளா, வாவு வஜீஹா கல்லூரி பேராசிரியர்கள் கவுசல்யா, ஜெசிந்தா மற்றும் ஆதித்தனார் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கவிதா, மோதிலால் தினேஷ், தாவீது, பாரதி ஆகியோர் செய்து இருந்தனர். பேராசிரியை சத்தியலட்சுமி நன்றி கூறினார்.


Next Story