அ.தி.மு.க. நிர்வாகிகள் துடிப்புடன் செயல்பட வேண்டும்


அ.தி.மு.க. நிர்வாகிகள் துடிப்புடன் செயல்பட வேண்டும்
x

அ.தி.மு.க. நிர்வாகிகள் துடிப்புடன் செயல்பட வேண்டும் என கும்பாகாணத்தில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாமில் முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

அ.தி.மு.க. நிர்வாகிகள் துடிப்புடன் செயல்பட வேண்டும் என கும்பாகாணத்தில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாமில் முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்

கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி., பாரதிமோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமநாதன், ரத்தினசாமி, ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்த விண்ணப்பங்களை ஒன்றிய நிர்வாகிகள், காமராஜூடம் வழங்கினர்.தொடர்ந்து முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:-

துடிப்புடன் செயல்பட வேண்டும்

தி.மு.க. ஆட்சியில் ஊழல், லஞ்சம், சட்ட ஒழுங்குசீர்கேடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த வெறுப்பில் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த ஆட்சிக்காலம் தான் பொற்காலம் என்று மக்கள் நினைக்கும் நேரமாக உள்ளதால் அ.தி.மு.க. நிர்வாகிகள் மிகுந்த உத்வேகத்துடன் செயல்பட்டு, கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

முன்னாள் முதல்-அமைச்சர் பழனிச்சாமியின் உத்தரவுப்படி 2 கோடி உறுப்பினர்கள் எண்ணிக்கை என்பதை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் துடிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், பழனிசாமி, முத்துக்கிருஷ்ணன், இளங்கோவன், கோபிநாதன், சூரியநாராணன், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகபிரபு, அமைப்புசாரா ஓட்டுனரணியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒன்றிய, மாநகர, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story