அ.தி.மு.க. வெற்றி பெற அனைவரும் அயராது உழைக்க வேண்டும்


அ.தி.மு.க. வெற்றி பெற அனைவரும் அயராது உழைக்க வேண்டும்
x

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

மயிலாடுதுறை

சீர்காழி, ஆக.11-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

சீர்காழியில் அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், ரவிச்சந்திரன், பேரூர் செயலாளர் போகர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வினோத் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் மண்டல செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க.அரசு பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்று விட்டது. ஆனால், இதுநாள் வரை எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாகியும் மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

வெற்றிக்கு உழைக்க வேண்டும்

அ.தி.மு.க.வின் பெருமுயற்சியால் தான் மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. சீர்காழியில் தனி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. புத்தூரில் புதிதாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் கடந்த சட்டமன்ற தேர்தலில் முறையாக பணி செய்யாததால் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. வரும் காலங்களில் இந்த தவறு நடக்காதவாறு நிர்வாகிகள் நடந்து கொள்ள வேண்டும்.வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற அனைவரும் அயராது உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

நிர்வாகிகள்

முன்னதாக மாவட்ட மகளிர் அணி செயலாளர் சக்தி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன் மற்றும் ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story