கிருஷ்ணகிரியில்சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்


கிருஷ்ணகிரியில்சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 15-ந் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் 76-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவின் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சுதந்திர தின விழாவை சிறப்பாக நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துறை அதிகாரிகள் செய்திட வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை அதிகாரிகள் செய்ய வேண்டும். நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் செய்ய வேண்டும். சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கலை நிகழ்ச்சி

விழாவிற்கு வருபவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுதக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட கல்வித்துறை ஒருங்கிணைத்து நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story