வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
தமிழகத்தில் வக்கீல்களுக்கும், வழக்காடிகளுக்கும் உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் வக்கீல்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தியும், வக்கீல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்தக்கோரியும், தமிழக அரசு வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக நிறைவேற்றி அமல்படுத்த வலியுறுத்தி நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் கரூர் மாவட்டத்திலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story