ஒரு மாத விடுமுறைக்கு பிறகு பட்டாசு ஆலைகளில் பணிகள் தொடக்கம்


ஒரு மாத விடுமுறைக்கு பிறகு பட்டாசு ஆலைகளில் பணிகள் தொடக்கம்
x

வெம்பக்ேகாட்டை பகுதிகளில் ஒரு மாத விடுமுறைக்கு பிறகு பட்டாசு ஆலைகளில் பணிகள் தொடங்கின.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்ேகாட்டை பகுதிகளில் ஒரு மாத விடுமுறைக்கு பிறகு பட்டாசு ஆலைகளில் பணிகள் தொடங்கின.

தீபாவளி சீசன்

வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி சீசனை முன்னிட்டு அக்டோபர் 20-ந் தேதியுடன் பட்டாசு உற்பத்தி நிறைவு பெற்றது.

தீபாவளி முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பண்டிகைகளுக்கான வட மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும், பெறப்பட்ட ஆர்டர்களை கொண்டு பட்டாசு உற்பத்தி தொடங்க ஆயத்தப் பணிகளை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் செய்திருந்தனர்.

பட்டாசு ஆலைகள் திறப்பு

ஆனால் கடந்த வாரம் வரை தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் பட்டாசு உற்பத்தி தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடினர். ஆனால் கடந்த சில தினங்களாக வழக்கமான வெயில் அடித்ததும் மழைக்கான அறிகுறியும் இல்லாததால் நேற்று முதல் பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு உற்பத்தி தொடங்கப்பட்டது.

ஒரு மாத விடுமுறைக்கு பிறகு பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டதால் பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பணிக்கு வந்தனர்.


Next Story