பாசன வாய்க்காலில் படர்ந்த ஆகாயத்தாமரைகள்


பாசன வாய்க்காலில் படர்ந்த ஆகாயத்தாமரைகள்
x

சீர்காழி கழுமலையாறு பாசன வாய்க்காலில் படர்ந்த ஆகாயத் தாமரைகளை அப்பகுதி இளைஞர்களே களமிறங்கி அகற்றினர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி கழுமலையாறு பாசன வாய்க்காலில் படர்ந்த ஆகாயத் தாமரைகளை அப்பகுதி இளைஞர்களே களமிறங்கி அகற்றினர்.

ஆகாய தாமரைகள்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கழுமலையாறு பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை நம்பி மேலத்தேனூர், கொண்டல், வள்ளுவக்குடி, நெம்மேலி, அகனி, தாடாளன் கோவில், சீர்காழி, தென்பாதி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்த வாய்க்காலில் கடந்த சில நாட்களாக குறைவான தண்ணீரே வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீரும் விளைநிலங்களை சென்றடையாமல், வாய்க்காலில் படர்ந்திருந்த ஆகாய தாமரைகள் தடுத்து வந்தது.

இளைஞர்கள் களம் இறங்கினர்

மேலும், இந்த பாசன வாய்க்காலில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிகளவு கொட்டப்பட்டதால் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி நின்றது. குறிப்பாக, கொள்ளிடம் முக்கூட்டு பாலம் அருகில் ஏராளமான ஆகாயத்தாமரைகள் படர்ந்து நீரின் போக்கை தடுத்து வந்தது. ஆகவே, இந்த வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.ஆனால், இதுநாள்வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பாசன வாய்க்காலில் இறங்கி வாய்க்காலில் படர்ந்திருந்த ஆகாய தாமரைகள், இறைச்சி கழிவுகள், மரக்கிளைகள், பழைய துணி மூட்டைகள் உள்ளிட்டவைகளை அகற்றினர். இளைஞர்களின் இந்த சமூக சேவையை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.


Next Story