அக்னி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


அக்னி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

அக்னி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கரூர்

தோகைமலை கடைவீதி குறிஞ்சி நகரில் பிரசித்தி பெற்ற அக்னி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, 3-ம் கால பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் அக்னி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் விநாயகர், ஏழுமலையான் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக தோகைமலை தமிழ் சங்க நிறுவனர் காந்திராஜன், தமிழ் சங்க இயக்குனர் சந்திப்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


Next Story