ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2022 12:20 AM IST (Updated: 23 Nov 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கனமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரமும், விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் நிவாரணமாக வழங்க கோரி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் சிம்சன் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கபிரியேல் முன்னிலை வகித்தார்.இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன், மாவட்ட செயலாளர் துரைராஜ், டெல்டா பாசனதாரர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் அன்பழகன், வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் வாணிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

ரூ.35 ஆயிரம் நிவாரணம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறையாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரமும், வேலை இன்றி தவிக்கும் விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் நிவாரணமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.தொடர்ந்து அதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாய சங்கங்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் மேகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சியின் ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story