தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள்


தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள்
x
தினத்தந்தி 18 Jun 2023 7:15 PM GMT (Updated: 18 Jun 2023 7:16 PM GMT)

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வண்டலூர் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 11 கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீ விபத்து நடந்த இடத்திற்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிதி உதவி மற்றும் போர்வை, அரிசி, மளிகை பொருட்கள் உளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சிவா, ஒன்றிய பொருளாளர் அசோகன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் துரை பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, முருகானந்தம், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் முருகன், தெற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் நடராஜன், நிர்வாகிகள் ராஜலிங்கம், கேசவன், வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story