அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்


அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்    கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:47 PM GMT)

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் தொண்டாற்றி வருகிறார்கள். ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்து ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருதினை தமிழக முதல்-அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. மேலும் இவ்விருது பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயர பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் பற்றி குறிப்பிட வேண்டும். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அம்பேத்கர் விருதினை பெற தகுதியுடையோர் உரிய விண்ணப்ப படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பத்தினை கட்டணமின்றி www.tn.gov.in/ta/forms/departme/1 என்ற இணையதள முகவரியின் மூலம் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற 28-ந்தேதிக்குள் (திங்கட்கிழமை) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story