மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி


மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
x

மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

சேலம்

மேச்சேரி:

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள நங்கவள்ளியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32). இவர் சேலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய வீடு புதிதாக கட்டும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று காலை வீடு கட்டும் பணிக்காக கார்த்திகேயன் இரும்பு கம்பியை எடுத்து சென்ற போது, உயர் அழுத்த மின்சார கம்பியில் இரும்பு கம்பி உரசியது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story