பழமையான கோட்டைகள் புகைப்பட கண்காட்சி


பழமையான கோட்டைகள் புகைப்பட கண்காட்சி
x

விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சி நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் உலக மரபு வார விழா கடந்த 19-ந் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு புகைப்பட கண்காட்சியும் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றளவும் மன்னர்களின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக கம்பீரமாக நிற்கும் கோட்டைகளின் பாரம்பரியத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் விளக்கும் படங்கள் இடம் பெற்றிருந்தன. அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை திருமயம் கோட்டை, திண்டுக்கல் கோட்டை, வேலூர் கோட்டை, கிருஷ்ணகிரி கோட்டை, செஞ்சி கோட்டை, பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, வட்டக்கோட்டை, தரங்கம்பாடி டேனீஷ் கோட்டை போன்ற 30-க்கும் மேற்பட்ட கோட்டைகளின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தது. இதனை ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு சென்றனர். இதற்கான ஏற்பாட்டினை அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் செய்திருந்தார்.


Next Story