நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.
நாமக்கல்
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு தினசரி அதிகாலை நடைதிறக்கப்பட்டு, சாமிக்கு அபிஷேகம் நடைபெறும். இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் அவர் பயபக்தியுடன் சாமியை தரிசனம் செய்தார். தரிசனம் முடித்த பிறகு காரில் கோவைக்கு புறப்பட்டு சென்ற அவர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார். முன்னதாக அவர் நேற்று காலையில் கரூரில் இருந்து நாமக்கல் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.
Next Story