போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மாநிலம் முழுவதும் போதைப்பொருளை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுப்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கி உள்ளார். அதே போன்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழி எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டு உள்ளார். இதனால் நேற்று மாவட்டம் முழுவதும் போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழி எடுக்கப்பட்டது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து மாணவ, மாணவிகள் உறுதி மொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் போலீசார், மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story