போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

குடியாத்தத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

வேலூர்

தமிழக அரசின் உத்தரவின் பேரில் குடியாத்தத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் ஊர்வலம் நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன் தலைமை தாங்கினார். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமலுவிஜயன் எம்.எல்.ஏ. போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மாணவ- மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு குறித்தும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். முன்னதாக போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்.

நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story