புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நடைபயணம்


புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நடைபயணம்
x

புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் ஒன்றிய கலால் ஆணையரகத்தின் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சி நேற்று நடந்தது. நடை பயணத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கொடி அசைத்து தொடங்கி வைத்து, அதில் கலந்து கொண்டார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் பாலக்கரை வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முடிவடைந்தது.

இதில் புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் வகையிலான பதாகைகள் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் மாணவர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி. மற்றும் ஒன்றிய கலால் ஆணையரகத்தின் திருச்சி சரக உதவி ஆணையர் பாஸ்கரன், அரசு தலைமை மருத்துவமனை இருக்கை மருத்துவ அலுவலர் டாக்டர் அர்ஜூனன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story