சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து காவிரி நீரை பெற வேண்டும்


சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து காவிரி நீரை பெற வேண்டும்
x

கருகும் பயிர்களை காப்பாற்ற சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து காவிரி நீரை பெற வேண்டும் என்று திருவாரூரில், விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கூறினார்.

திருவாரூர்

திருவாரூர்;

கருகும் பயிர்களை காப்பாற்ற சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து காவிரி நீரை பெற வேண்டும் என்று திருவாரூரில், விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கூறினார்.

பேட்டி

திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மாசிலாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தீர்ப்பின்படியான தண்ணீரை தமிழகத்துக்கு திறக்க முடியாது என கூறிய கர்நாடக அரசின் மனிதநேயமற்ற செயலை கண்டிக்கிறோம்.சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன் முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை கர்நாடகம் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய நிலுவையில் உள்ள தண்ணீர் 38 டி.எம்.சி ஆகும். கர்நாடக அணைகளின் மொத்த கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் நீர் இருப்பில் இருந்தும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்துள்ளது.

8 டி.எம்.சி. தண்ணீர்

மேட்டூர் அணையின் நீர் இருப்பு மூலம் மேலும் சில நாட்களுக்குதான் தண்ணீர் திறக்க முடியும். முதல் நாள் நடந்த கண்காணிப்பு குழு கூட்டத்தில் 25 டி.எம்.சி. திறந்துவிட ஒப்புதல் அளித்த கர்நாடக அரசின் உயர் அலுவலர்கள், மறுநாள் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இதை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளனர்.இதன் பின்னர் தான் சுமார் 8 டி.எம்.சி அளவு மட்டும் தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

தமிழ்நாட்டில் தற்போது காய்ந்த பயிா்கள் போக எஞ்சிய குறுவை பயிரை காக்க அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து உரிய காவிரி நீரை பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.மேலும் குறுவை விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திட தமிழ்நாடு அரசே காப்பீடு திட்டத்தை ஏற்று அமல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story