விநாயகர் சதுர்த்தி குறித்து அவதூறாக பேசியவர் கைது


விநாயகர் சதுர்த்தி குறித்து   அவதூறாக பேசியவர் கைது
x
திருப்பூர்


உடுமலையை அடுத்த புக்குளம் பகுதியில் உள்ள சிலர் ஒன்றிணைந்து புக்குளம் 7½ என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஒன்று வைத்துள்ளனர். இந்தநிலையில் அதில் உறுப்பினராக உள்ள அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் ரமேஷ் விநாயகரின் பிறப்பு மற்றும் சதுர்த்தி விழாவைக் கிண்டல் செய்து 3 ஆடியோக்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

 இந்துமத வழிபாட்டை அவதூறாகப் பேசிய இந்த ஆடியோ குறித்து தகவலறிந்த இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் உடுமலை போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரமேஷை கைது செய்து சிறையிலடைத்தனர்.மேலும் புக்குளம் பகுதியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story