போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
திருப்பூர்


உடுமலையை அடுத்த மானுப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் தம்புராஜ் (வயது 22) தொழிலாளி.இவர் 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயதான மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. பள்ளிக்குச் சென்ற மாணவி இரவாகியும் வீடு திரும்பாததால் அது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர்.இந்த நிலையில் தம்புராஜ் சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உடுமலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தம்புராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story