ராணுவத்துக்கு பெண்கள் தேர்வு: கடலூரில் 9-ந் தேதி நடக்கிறது
அக்னிவீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு பெண்களை சேர்க்கும் வகையில் கடலூர் அண்ணா மைதானத்தில் வருகிற 9-ந் தேதி ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடக்கிறது.
சென்னை,
மத்திய அரசின் பாதுகாப்பு துறை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அக்னிவீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு பெண்களை சேர்க்கும் வகையில் கடலூர் அண்ணா மைதானத்தில் வருகிற 9-ந் தேதி ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடக்கிறது. நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்கள், ஆவணங்களுடன் நேரில் ஆஜராக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உரிய சான்றிதழ்கள், ஆவணங்கள் இல்லாதவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். யாரேனும் ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினால் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story