நறுமண பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு
நறுமண பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு நடைபெற்றது.
நீலகிரி
குன்னூர்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நறுமணப் பயிர்கள் துறை சார்பில், குன்னூர் வட்டாரத்தில் உள்ள கொல்லிமலை பழங்குடியின கிராமத்தில் விவசாயிகளுக்கு நறுமண பயிர்கள் சாகுபடி குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு நறுமண பயிர்கள் சாகுபடி பற்றியும், அதனால் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் பற்றியும் பேராசிரியை விளக்கம் அளித்தார். மேலும் குன்னூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் இயற்கை வேளாண்மை பற்றியும், நறுமண பயிர்கள் சாகுபடியின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி கூறினார். இதில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு கைத் தெளிப்பான் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்பட்டது. பயிற்சியில் குன்னூர் வட்டார தோட்டக்கலை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story