ஈரோட்டில் காரில் போதை ஊசி, கஞ்சா கடத்திய வாலிபர் கைது


ஈரோட்டில் காரில் போதை ஊசி, கஞ்சா கடத்திய வாலிபர் கைது

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில் காரில் போதை ஊசி மற்றும் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வாகன தணிக்கை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை யாரேனும் காரில் எடுத்துச்சென்றால் அவர்களை கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் ஈரோடு -பவானி ரோட்டில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் வந்து கொண்டிருந்தது. போலீசாரை பார்த்ததும் அந்த கார் திடீரென நின்றது. பின்னர் காரில் இருந்த வாலிபர் காரை பின்னோக்கி வேகமாக எடுக்க முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

போதை ஊசி -கஞ்சா

அப்போது காரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் போதை ஊசிகள், பாட்டில்களும் இருந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் காரில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஈரோடு சூளை அருள்வேலவன் நகரை சேர்ந்த முகமதுஆசிக் (வயது 28) என்பதும், ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வருவதும், அவர் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றதையும் ஒப்புக்கொண்டார்.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது ஆசிக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள், போதை ஊசிகள், கார் பறிமுதல் செய்யப்பட்டன. போதை ஊசிகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்தும், அதை யாருக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து செல்லப்பட்டது என்பது குறித்தும் முகமது ஆசிக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story