வட மாநில தொழிலாளி தாக்கப்பட்ட வழக்கு:தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது


வட மாநில தொழிலாளி தாக்கப்பட்ட வழக்கு:தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது
x

வட மாநில தொழிலாளி தாக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

அன்னதானப்பட்டி:

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா நகரை சேர்ந்தவர் ஜாகீர் கான் (வயது 25). இவர் சேலம் மணியனூர் உத்திரப்பன் காடு பகுதியில் உள்ள வெள்ளிப்பட்டறையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த 26-ந் தேதி இரவு ஜாகீரும், உடன் பணிபுரியும் நண்பர்களும் அருகே உள்ள கடைக்கு டிபன் வாங்க சென்றனர்.

அப்போது அங்கு வந்த 4 பேருக்கும், ஜாகீர் தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஜாகீர் படுகாயம் அடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியனூர் உத்திரப்பன் காட்டை சேர்ந்த மதன் (27), அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த ஷாஜகான் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஏழுமலை (25), ராஜகணேஷ் என்ற கணேசன் (23) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story