தாதகாப்பட்டியில் தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்தவர் கைது
தாதகாப்பட்டியில் தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்
அன்னதானப்பட்டி:
சேலம் பெருமாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் (வயது 23), தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் தாதகாப்பட்டி தாகூர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் தீபன் ராஜை திடீரென வழிமறித்து, கத்தியைக்காட்டி மிரட்டினார். மேலும் அவரிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 600 மற்றும் ஒரு பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து மர்ம நபர் தப்பிச்சென்று விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்டவர், தாகூர் தெரு பகுதியைச் சேர்ந்த ஜடேஜா என்ற தியாகராஜன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், மோதிரம் மீட்கப்பட்டதுடன், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story