போதைப்பொருட்கள் விற்றால் கைது நடவடிக்கை


போதைப்பொருட்கள் விற்றால் கைது நடவடிக்கை
x

போதைப்பொருட்கள் விற்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் கூறினார்.

வேலூர்

பள்ளிகொண்டா பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய இன்ஸ்பெக்டர் தடை செய்யப்பட்டபோதை பொருட்களை சட்டத்தை மீறி வியாபாரம் செய்து வருகிறீர்கள். இதனால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு அவர்களுடைய குடும்பம் நடுத்தெருவிற்கு வருகின்றது. போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பெட்டிக்கடை, மளிகை கடைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் கைது செய்து சிறையில் அடைப்போம். உங்களுடைய வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார்.

கூட்டத்தில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story