கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் அட்கோ போலீசார் குமுதேப்பள்ளி பஸ் நிறுத்தம், பஸ்தி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அத்திமுகம் குமார் (வயது23), சாமனப்பள்ளி அஜய் (28), விநாயகபுரம் சரத்குமார் (26) ஆகியோர் என தெரியவந்தது. மேலும் இவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story