கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:45 PM GMT)

கிருஷ்ணகிரி , ஓசூர் பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீசார் செட்டியம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்ற நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர் 45 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது அதே பகுதியை சேர்ந்த அஜித் (வயது24) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நாரிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா வைத்திருந்த சொன்னேபுரத்தைச் சேர்ந்த திம்மராஜ் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story