கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.33½ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை வாங்கிய பழனி கோவில் நிர்வாகம்


கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  ரூ.33½ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை வாங்கிய பழனி கோவில் நிர்வாகம்
x

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.33½ லட்சத்துக்கு பழனி கோவில் நிர்வாகம் நாட்டு சர்க்கரை வாங்கியது.

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.33½ லட்சத்துக்கு பழனி கோவில் நிர்வாகம் நாட்டு சர்க்கரை வாங்கியது.

நாட்டு சர்க்கரை

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. கவுந்தப்பாடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,134 மூட்டை நாட்டு சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.

இதில் 60 கிலோ எடை கொண்ட முதல் தர நாட்டு சர்க்கரை சிப்பம் குறைந்தபட்ச விலையாக 2,640 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2,650 ரூபாய்க்கும், சராசரி விலையாக 2,645 ரூபாய்க்கும் ஏலம் போனது.

மீடியம் ரக நாட்டு சர்க்கரை ஒரு சிப்பம் குறைந்தபட்ச விலையாக 2,350 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2,480 ரூபாய்க்கும், சராசரி விலையாக 2,415 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 1,288 மூட்டை நாட்டு சர்க்கரை 32 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய்க்கு ஏலம் போனது.

பஞ்சாமிர்தம் தயாரிக்க...

உருண்டை வெல்லம் 30 கிலோ கொண்ட சிப்பம் முதல் ரகம் ஒரே விலையாக 1,500 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 60 மூட்டை உருண்டை வெல்லம் 90 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

நாட்டு சர்க்கரையையும், உருண்டை வெல்லத்தையும் மொத்தமாக 33 லட்சத்து 51 ஆயிரத்து 560 ரூபாய்க்கு பழனி முருகன் கோவில் நிர்வாகம் பஞ்சாமிர்தம் தயாரிக்க கொள்முதல் செய்தது.


Next Story