கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


கொடிவேரி அணையில்  சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ள கொடிவேரி அணை ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தலமாகும். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் கொடிவேரி அணைக்கு வந்து குளித்து மகிழ்வார்கள். இந்தநிலையில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கொடிவேரி அணையில் குளிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். நீர்வரத்தை பொறுத்து தடை நீக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.


Next Story