ஸ்ரீவெங்கடஸ்வரபுரம் காவடிபிறை முருகன்கோவிலில் சோமவார சிறப்பு பூஜை


ஸ்ரீவெங்கடஸ்வரபுரம் காவடிபிறை முருகன்கோவிலில்  சோமவார சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 22 Nov 2022 6:45 PM GMT)

ஸ்ரீவெங்கடஸ்வரபுரம் காவடிபிறை முருகன்கோவிலில் சோமவார சிறப்பு பூஜை நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்,:

சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் காவடிபிறை முருகன் கோவிலில் கார்த்திகை முதல் சோமவார சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், 108 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடினர். மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு தீபாராதனை, உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story