தூக்குப்போட்டு விளையாட்டு வீரர் தற்கொலை


தூக்குப்போட்டு விளையாட்டு வீரர் தற்கொலை
x

தூக்குப்போட்டு விளையாட்டு வீரர் தற்கொலை

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கஞ்சமலை தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பாலாஜி(வயது23). கைப்பந்து விளையாட்டு வீரரான இவர் பலபோட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்றுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு பாலாஜி, வீட்டில் மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பசுபதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலாஜி உடலை போலீசார் கைப்பற்றி வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.


Next Story